சித்ரா தன் பெற்றோருக்கு முழு சம்மதமின்றி தன் ப்ரொபசர் துர்காவின் தம்பி கோபியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்குப் பின் தனது அன்பின் மூலம் சித்ராவின் பெற்றோர் தன்னை முழு மனதாக ஏற்றுக் கொள்ளும்படி செய்கிறான்.
ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைகிறான் கோபி. அவனது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள் சித்ரா. கோபியின் விருப்பப்படி சாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து இயல்பாக இருக்கிறாள். இதனை விரும்பாத பெற்றோருடன் இருந்து விலகி கோபியுடன் இருந்த வீட்டில் தனியாக வசிக்கிறாள்.
கோபியின் அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ட்ரைனியாக சேர்கிறாள். அங்கு சரவணனுடன் பழகுகிறாள். அவன் அவளை மணந்து கொள்ள விரும்புகிறான். சமுதாயத்திற்குப் பயந்து தயங்குகிறாள் மேலும் சரவணனை கோபியுடன் ஒப்பிட்டுப் பார்த்து குழம்புகிறாள்.
இறுதியில் துர்கா சரவணனுடன் சேர்ந்து சித்ராவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்து உண்மையை உணர வைத்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர்.
No comments:
Post a Comment