சேகர் மற்றும் பரிமளா எழுத்தாளர் இந்துவதானா கொடுத்த தகவலின் படி டாக்டர் நாகராஜ் ஒரு போலி டாக்டர் என்பதை அவர் வாயினாலே கூற வைத்து கைது செய்கின்றனர். நாகராஜின் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை என தீர்ப்பாகிறது. இதனால் நாகராஜின் தம்பி குமாரலிங்கம் இந்துவதனாவை பழி வாங்க திட்டமிடுகிறான்.
தூக்கு தண்டனை கைதி விக்டரின் கடைசி ஆசையின் படி அவனது வாழ்வில் நடந்த சோகத்தை உண்மைக் கதையாக எழுத திட்டமிடுகிறார் இந்து வதனா. இந்த தொடர் கதை வெளி வந்தால் தன்னுடைய பெயர் கெட்டு விடும் என்பதால் இந்துவை எக்ஸ் எம்.எல்.ஏ மதன கோபால் மிரட்டுகிறார்.
குமாரலிங்கம் இந்துவின் கணவன் பரிதியை கடத்தி கொலை செய்ய திட்டமிடுகிறான். அவனிடமிருந்து தப்பிய பரிதியை பிடிக்க முயலும் போது சாலை விபத்தில் குமார லிங்க கும்பல் இறந்து விடுகின்றனர்.
மதன கோபால் இந்துவை தாக்க ஆட்களை அனுப்பி விட்டு நெஞ்சு வலி என நடித்து ஆஸ்பிட்டலில் அட்மிட்டாகிறார். உண்மை என நம்பி டாக்டர் அளித்த ட்ரிட்மென்டில் மதன கோபால் இறந்து விடுகிறார். இந்துவின் வலது கையை முறித்தும், வர்மக் கலையின் மூலம் பேச முடியாமல் செய்து விடுகின்றனர். டாக்டர்களும் அவரின் ரிப்ப்போர்டைப் படித்து விட்டு விரைவில் குணமாகி விடுவார் என்கின்றனர். இந்து வதனா இடது கைப் பழக்கம் கொண்டவராதலால் அந்த தொடர் கதையை தொடர்ந்து எழுதுகிறார்.
No comments:
Post a Comment