சுந்தரம் ராணியை காதலித்து பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு மாத கருவை அழித்து விடுவேன் எனக் கூறி பிரிந்து விடுகிறாள். இதனால் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வீணாகப் போக இருந்தவனை திருத்தி நல் வழிக்கு கொண்டு வருகிறாள் கங்கா. பின் சுந்தரத்துடன் தாலி கட்டிக் கொள்ளாமல் பதி நான்கு ஒரே வீட்டில்ஆண்டுகளாக வசிக்கிறாள்.
டிரைவர் சுடலையைத் தவிர மற்ற அனைவரும் இவர்களை கணவன் மனைவி என்றே நினைக்கின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது ராணி மற்றும் அவளது பெண்ணும் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்தால் அங்கு சென்று அவனது பெண் பப்லூவை அழைத்து வருகிறான்.
ராணி இறந்து விட்டதாக பப்லூ கூறுகிறாள். அவள் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவளைப் போல நடித்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன் தந்தையின் நல்வாழ்வுக்காக தான் அவரை விட்டு விலகியதாகவும் தன் தாய் உயிரோடு இருப்பதை மறைத்து விட்டதாகவும் டிரைவர் சுடலையிடம் கூறுகிறாள்.
No comments:
Post a Comment