Mar 25, 2012

சிறகடிக்க ஆசை

லேகா கோடீஸ்வரர் ராமகிருஷ்ணனின் ஒரே பெண். அவளது பாது காப்பிற்காக சில பாதுகாவலர்களை நியமிக்கின்றனர். லேகா காலேஜ் மற்றும் எங்கு சென்றாலும் அவர்கள் அவளை பின்தொடர்வது லேகாவிற்கு பிடிக்க வில்லை. தந்தை தன் மீது நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு செய்வதாக நினைத்து, சில மாதங்களாக அறிமுகமான இணையதள அரட்டை நண்பன் சஞ்சீவ் கூறியதன் பேரில் வீட்டை விட்டு அவனுடன் பெங்களூருக்கு செல்கிறாள்.

லேகாவின் சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட எபிலேசி வகை நோயினை குணப்படுத்த கோடிக்கணக்கான மதிப்புடைய வைரத்தை அவளது கை மணிக்கட்டில் ஆபரேசன் மூலம் டாக்டர் மதன் ராய் வைத்துள்ளார்.

லேகாவின் உயிருக்கு என்ன ஆபத்து, சஞ்சீவ் யார், மதன் ராய் நல்லவரா கெட்டவரா, லேகா பிழைத்தாளா என்பதை நாவலைப் படைத்து தெரிந்து கொள்ளவும்.

No comments: