Mar 22, 2012

நிலவு உதிக்காத இரவு

வருணும் தயாபரியும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள். இருவரும் நண்பர்களாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

தயாபரி இறந்து போன தன் தந்தையின் டைரியின் மூலம், தன் தாய் சஞ்சனா திருமணம் செய்யாமலே தன்னை பெற்றதையும், அவள் தந்தைக்குப் பயந்து தோழி அபூர்வா மூலம் காதலனிடம்(தயாபரி அப்பாவிடம்) குழந்தையை ஒப்படைத்து வீடு வேறு கல்யாணம் செய்து கொண்டதையும், குழந்தைக்காக சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டதையும் தெரிந்து கொண்டாள்.

வருண் பதவி உயர்வினால் ஜெர்மனிக்கு செல்ல வேண்டி இருந்ததால் பாஸ்போர்ட், விசா போன்றவற்றிக்காக அவசரமாக தயாவிடம் சொல்ல முடியாமல் டெல்லி செல்கிறான். சரஸ்வதியும், சங்கரும் தயாவை கண்டுபிடித்து அவள் தாயினை மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்கள்.

அலுவலகத்திற்கு புதிதாக ஜி. எம்மாக வரும் அபூர்வா தயாவை அடையாளம் கண்டு கொள்கிறாள். மும்பையிலிருக்கும் சஞ்சனாவிடம் தயாவை சேர்க்கிறாள். சங்கர் வருணிடம் விரைவில் தனக்கும் தயாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறுகிறான். இதைக் கீட வருண் நொறுங்கி விடுகிறான். தவறான ஒருவனை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதாக வருந்தும் சஞ்சனாவின் தந்தை தயாவிடம், நீ யாரையாவது விரும்பினால் சொல். அவனுடன் உன்னை சேர்த்து வைப்பதாக கூறுகிறார்.

பல்வேறு குழப்பத்திற்கிடையில் தயாவும் வருணும் ஒன்று சேர்கின்றனர்.

No comments: