கதிரவனும் திரு மூர்த்தியும் மும்பையில் சாப்ட்வேர் நிறுவனமொன்றில் ஒன்றாக பணி புரியும் நண்பர்கள். கதிரவன் வெண்ணிலாவை காதலித்து இரண்டு மாதங்களில் இரு வீட்டுப் பெற்றோரின் சம்மதத்திற்கேற்ப திருமணம் செய்ய காத்துக்கொண்டிருக்கிறான்.
இதற்கிடையில் வெண்ணிலாவிற்கு ஒரு மர்ம போன் மிரட்டல் வருகிறது. கதிரும் காணமல் போகிறான். போலீஸ் எங்கு தேடியும் கதிர் கிடைக்க வில்லை. கதிர் இல்லாமல் இறந்து விடுவாள் என இரு வீட்டு பெரியவர்களின் சம்மதத்திற்குப் பிறகு திரு மூர்த்தி பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் முகத்தை கதிரின் முகமாக மாற்றிக் கொள்ள நினைக்கிறான்.
திரு மூர்த்தியின் எண்ணம் நிறைவேறியதா?, அவனின் இந்த நினைப்பிற்கு காரணமாக இருந்தது என்ன? மற்றும் கதிர் உயிருடன் வந்தானா? என்பதை நாவலில் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment