கேப்டன் சென், கோ பைலட் துவாரகேஷ் மற்றும் ஏர் ஹோஸ்டஸ் வஹிதா ஆகியோரின் மூலம் வெளிநாட்டு உளவாளிகளான உஸ்மான், பாபுராவ் ஆகியோர் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அண்டை நாடுகளுக்கு செல்லும் சமாதான குழுவிலுள்ள எம்.பி. மற்றும் பயணிகளையும் சுட்டுக் கொன்று உள்நாட்டில் கலகத்தை உண்டு பண்ணுவது.
ஆனால் சென்னும், துவாரகேஷும் திட்டத்தை மாற்றி பயணிகளைக் கொல்லாமல், நாடகமாடி இந்த சதிக்கு மூலவராக இருப்பவரை கண்டுபிடிக்க எண்ணுகின்றனர். வஹிதாவின் துரோகத்தால் இவர்கள் இருவரும் எதிரிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
வஹிதாவின் வேஷம் கலைந்ததா? அந்த மூலவர் யார்? கேப்டனும், பைலட்டும் எதிரிகளிடமிருந்து மீட்கப் பட்டார்களா? என்பதை நாவலினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment