செந்தில் தன் வயதான தாய் மீனாட்சி மற்றும் கைக்குழந்தை முகிலனுடன் மனைவியை பறிகொடுத்த கையோடு வங்கியில் மாற்றல் வாங்கிக் கொண்டு கிராமத்திற்கு வருகிறான். அந்த கிராமத்து பண்ணையார் சட்ட நாதன், அவரது மனைவி சொர்ணம் மற்றும் மகள் அரசி ஆகியோர் அவனது குடும்பத்திற்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர்.
அரசிக்கு தன் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதை அறிந்தும் பண்ணையாருக்குப் பயந்தும், வயது வித்தியாசத்தின் காரணமாகவும் அவளை தவிர்த்து வந்தான் செந்தில். செந்திலை அவனுடன் பணி புரியும் கனக லட்சுமியும் விரும்புகிறாள்.
மகள் அரசி செந்தில் மீது காதல் வயப்பட்டிருப்பதை அறிந்த சொர்ணம் அது தன் கணவருக்கு பிடிக்காதென்பதால் அவசரமாக மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி வாத்தியார் பெருமாள் சாமியிடம் கூறினாள். வாத்தியாரின் மனைவி காளி பணத்திற்கு ஆசைப்பட்டு தனது தூரத்து சகோதரி சவுந்தரத்தின் மகன் செல்வத்தை பண்ணையாருக்கு மருமகனாக்க திட்டமிட்டாள்.
சவுந்தரத்தின் வீட்டில் சட்ட நாதன் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?, செந்தில் யாரை கை பிடித்தான் என்பதை மிகவும் சுவாரசியமாக நாவலில் கூறி இருக்கிறார் ஆசிரியர் அனுராதா ரமணன்.
No comments:
Post a Comment